கண்கள் கூச
உறக்கம் தொலைத்தோம்
பொழுது புலர்ந்தாயிற்றாம்
மீண்டும் தொடங்குகிறோம்
எங்கு செல்கிறோம்…?
எதற்காய் செல்கிறோம்…?
விடைகளற்ற வினாக்களோடு
தொடர்கிறது பயணம்
எதிரிகளின் குண்டுகள்
சுவை பார்த்த தேகம்
காட்டு வழி முற்களும்
எம்மைத் தீண்ட
வெட்கித் தலை குனியும்
கால்கள் தொலையும்
வழி தேடி
மனமும் அலையும்
பாலுக்காய் அழும்
குழந்தைகள்
இரத்தம் தாராளம்
பசியோடு அலையும்
கொடும் காட்டு விலங்குகளும்
இரக்கத்தோடு பாதை விலகும்
தமிழ் குழந்தைகள்
எதிரிகளின்
பயிற்சி இலக்குகள்
பாதையெங்கும்
பழகிய பிணவாடை
கருகிப்போன தமிழுயிர்கள்
உயிர் களைக்கும்
போதெல்லாம்
எஞ்சிய மழலைகளின்
அழுகுரல்
புத்துயிர்ப்பு
மரண ஓலங்கள்
கண்ணீர்ப் பாதைகள்
என்றாலும்
தொடர்ந்து செல்வோம்
நாளைய உதயம்
எமக்கில்லை
உயிர்ப்பிரியும்
இறுதி வினாடிகளின் நப்பாசை
கிழக்குச் சூரியன்
skip to main |
skip to sidebar
எனது சொந்த படைப்புக்களுக்கான அடையாளம்... நீண்ட கால தேடல்களில் இலக்குகள் தெரியாமல் தேடி அலைந்தவனின் இளைப்பாறுமிடம்…!
திங்கள், 6 ஏப்ரல், 2009
Rank
என்னைப் பற்றி
- சசிகுமார் பாலகிருஸ்ணன்
- பிறந்தோம்... வாழ்ந்தோம்... இறந்தோம்...! என்ற ஒற்றை வரிக்குள் அடங்கவிரும்பாதவன்.

