செவ்வாய், 6 ஜூலை, 2010

மூன்றாம் கண்

கனத்துபோன மனதோடு
கோயில் செல்கிறேன்.

செல்லால் அடித்து எம்மை
செல்லா காசாய்
சிதைத்தவர் கூட்டம்
நன்றாய் வாழ நீயும்
அருள் புரிந்திடுவாய் தினமும்

கல்லறை அகழும்
நரமாமிசப் பிணங்கள்
காவலிருப்பாய்
நீயே கடவுள்…!

எம்மின பெண்களை
வன்புணரும் கம்சர்கள்
போதி மரத்து கிளையுடைத்து
நிழல் படுக்கை செய்வாய்
நீயே தேவ தூதன்....!

கல்லாய் போன
கடவுளிடம் ஒரு கேள்வி
கடலளவு தமிழர் இரத்தம்
குடித்தும்
அடங்கவில்லையா
உன் தாகம் மட்டும்…?
இனிமேல் அடுப்பெரிக்கவாவது
உதவட்டும்
கிழிந்துப்போன
பகவத்கீதையும் பைபிளும் .

1 கருத்து:

vijithu சொன்னது…

//இனிமேல் அடுப்பெரிக்கவாவது
உதவட்டும்
கிழிந்துப்போன
பகவத்கீதையும் பைபிளும்//
Superb.......